#LIVE: பிரதமர் மோடி தலைமையில் 43 புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு.!
டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான 43 புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்று வருகின்றனர்.
பிரதமர் மோடி தலைமையில் பாஜக 2வது முறையாக கடந்த 2018ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த பிறகு, கடந்த 2 ஆண்டுகளாக அமைச்சரவையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்தது. பிரதமர் மோடி அமைச்சரவை முதல் முறையாக இன்று விவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் 43 பேர் இடம்பெற்றுள்ளனர். புதிய மத்திய அமைச்சரவையில் 11 பெண்கள், 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகள், 6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 14 பேர் 50 வயதுக்கும் குறைவானவர்கள் ஆவார்.
மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், 12 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான 43 புதிய மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவராக பதவியேற்று வருகின்றனர். இவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த பதவி பிரமாணம் செய்து வருகிறார்.
அதன்படி,
- மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் நாராயண் ரானே, மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
- அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் சர்பானந்த சோனோவால் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
- மத்திய பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் வீரேந்திர குமார் மீண்டும் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
- மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜோதிராதித்ய மாதவராவ் சிந்தியா மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
- ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ராம்சந்திர பிரசாந்த் சிங் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
-
ராஜஸ்தானை சேர்ந்த மாஜி ஐ.ஏ.எஸ். அதிகாரி அஸ்வினி வைஷ்ணவ் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
-
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ராம்சந்திர பிரசாந்த் சிங் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
- லோக்ஜனசக்தி (அதிருப்தி அணி) தலைவர் பசுபதிகுமார் பாரஸ் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
- மத்திய இணை அமைச்சராக இருந்த கிரன் ரிஜுஜூ கேபினட் அமைச்சராக பதவியேற்றார்.
- முன்னாள் உள்துறை செயலாளரான ராஜ்குமார்சிங் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
- மத்திய இணை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி கேபினட் அமைச்சராக பதவியேற்றார்.
- மத்திய இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேபினட் அமைச்சராக பதவியேற்றார்.
- ராஜஸ்தானின் ராஜ்யசபா எம்.பி. பூபேந்தர் யாதவ் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
- மத்திய இணை அமைச்சராக இருந்த புருஷோத்தம் ரூபலா கேபினட் அமைச்சராக பதவியேற்றார்.
- மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி (தெலுங்கானா) கேபினட் அமைச்சராக பதவியேற்றார்.
- மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருந்த அனுராக்சிங் தாக்கூர் கேபினட் அமைச்சராக பதவியேறார்.
- உ.பியை சேர்ந்த பங்கஜ் செளத்ரி மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
- உ.பியை சேர்ந்த அப்னா தள் கட்சியின் அனுப்பிரியா சிங் பட்டேல் அத்திய அமைச்சராக பதவியேற்றார்.
- உ.பி.யின் சத்யபால் சிங் பகேல் மத்திய அமைச்சராகப் பதவியேற்றார்.
- கர்நாடகா ராஜ்யசபா எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
- கர்நாடகா முன்னாள் அமைச்சர் ஷோபா கரந்த்லஜே மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
- உ.பி.யின் பானுபிரதாப்சிங் வர்மா மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
- குஜராத்தின் லோக்சபா எம்.பி. தர்ஷண விக்ரம் ஜர்தோஷ் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
- டெல்லி எம்.பி. மீனாட்சி லேகி மத்திய அமைச்சராகப் பதவியேற்றார்.
- குஜராத்தின் லோக்சபா எம்.பி. தர்ஷணா விக்ரம் ஜர்தோஷ் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
- கர்நாடகாவின் ஏ. நாராயணசாமி மத்திய அமைச்சராகப் பதவியேற்றார்.
- கெளசல் கிஷோர் மத்திய அமைச்சராகப் பதவியேற்றார்.
- அன்னபூர்னா தேவி மத்திய அமைச்சராகப் பதவியேற்றார்.
- மத்திய அமைச்சராக அஜய்பட் பதவியேற்றார்.
- மத்திய அமைச்சராக பி.எல். வர்மா பதவியேற்றார்.
-
மத்திய அமைச்சராக அஜய்குமார் பதவியேற்றார்.
-
மத்திய அமைச்சராக தேவுசிங் செளகான் பதவியேற்றார்.
- மத்திய அமைச்சராக பகவந்த் கூபா பதவியேற்றார்.
- மத்திய அமைச்சராக கபில் மோரேஸ்வர் பாட்டீல் பதவியேற்றார்.
-
திரிபுரா பெண் எம்.பி. பிரதிமா பொய்மிக் மத்திய அமைச்சராகப் பதவியேற்றார்.
-
டாக்டர் சுபாஷ் சர்கார் மத்திய அமைச்சராகப் பதவியேற்றார்.
- டாக்டர் பகவத் கிஷன்ராவ் கராத் மத்திய அமைச்சராகப் பதவியேற்றார்.
- டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் மத்திய அமைச்சராகப் பதவியேற்றார்.
- டாக்டர் பாரதி பிரவின் பவார் மத்திய அமைச்சராகப் பதவியேற்றார்.
-
பிஸ்வேஸ்வர் டுடு மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
- மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார் பாஜக மாநில தலைவர் எல். முருகன்.
- முஞ்சப்பார மகேந்திரபாய் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
-
ஜான் பார்லா மத்திய அமைச்சராகப் பதவியேற்றார்.