#LIVE: பொதுமுடக்கத்தை பல இடங்கள் சரியாக பின்பற்றவில்லை – பிரதமர் கவலை.!
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5.50 லட்சத்தை நெருங்கியது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி தற்போது நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறது. ஊரடங்கு தொடர்பாக 6-வது முறையாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அதில், சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்ட பொதுமுடக்கத்தால் பல உயிரிகள் காப்பாற்றப்பட்டது. கொரோனாவால் இந்தியாவில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாக உள்ளது. மழைக்காலம் தொடங்கவுள்ள சூழலில், மக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
மேலும், பொதுமுடக்கத்தை பல இடங்கள் சரியாக பின்பற்றவில்லை. பிற நாடுகளை ஒப்பிடுகையில், நமது நாடு கொரோனவை சிறப்பாக எதிர்கொண்டுள்ளது. இப்போது செய்யக்கூடிய சிறிய தவறுகள் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடலாம்.
அரசின் விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையாக தண்டிக்கப்படும் என மோடி தெரிவித்தார். பொதுமுடக்க தளர்வுகளால் மக்கள் பலர் முகக்கவசம் அணியாமல் பொறுப்பற்ற முறையில் உள்ளனர். கொரோனா விதிமீறலுக்காக ஒரு நாட்டின் பிரதமருக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை பார்க்கிறோம் என தெரிவித்தார்.
பிரதமர் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரும் நமது நாட்டில் ஒரே விதிதான். 80 கோடி மக்களுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டம் ,மேலும் 5 மாதங்களுக்கு நீட்டிப்பு என அறிவித்தார். நாட்டின் பொருளாதார சூழலையோ மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், கரீப் கல்யாண் திட்டதிற்காக சுமார் ரூ.2.50 லட்சம் கோடி செலவிடப்படவுள்ளது,எனவும் 3 மாதங்களில் 31 ஆயிரம் கோடி ருபாய் நேரடி பணஉதவி வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.