சிறார்களின் லிவ்-இன் உறவு சட்டவிரோதமானது..! அலகாபாத் உயர்நீதிமன்றம்..!

LiveInRelationship

அலி அப்பாஸ் எனும் 17 வயது சிறுவன், 19 வயதுடைய சலோனி யாதவ் என்பருடன் லிவ்-இன் உறவில் இருந்துள்ளார். இதனையடுத்து, சிறுமியைக் கடத்திச் சென்றதாக, அந்த சிறுவன் மீது, சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் புகார் தெரிவித்த நிலையில் வழக்குப் செய்யப்பட்டது.

இதன்பின், அலி அப்பாஸ் மற்றும் சலோனி யாதவ் இருவரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் சிறுவனைக் கைது செய்யக் கூடாது என்றும் சிறுவன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீது நீதிபதிகள் விவேக் குமார் பிர்லா மற்றும் நீதிபதி ராஜேந்திர குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், லிவ்-இன் உறவை திருமணம் போன்று ஒரு உறவாகக் கருதுவதற்குப் பல நிபந்தனைகள் உள்ளன. அதற்கு ஒருவர் 18 வயதுக்கு மேல் உடையவராக வேண்டும்.

எனவே, 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் லிவ்-இன் உறவில் இருக்க முடியாது என்றும், இது ஒழுக்கக்கேடான செயல் மட்டுமல்லாமல், சட்டத்துக்குப் புறம்பானதும் ஆகும் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால், அந்த சிறுவன் பெண்ணுடன் லிவ்-இன் உறவைக் கொண்டிருப்பதாகக் கூறி பாதுகாப்பைப் பெற முடியாது எனக் கூறியுள்ளது.

மேலும், இந்த செயல்பாடு சட்டத்தில் அனுமதிக்கப்படாததால், அவர் மீதான குற்றவியல் வழக்கை ரத்து செய்யக் கோர முடியாது. எனவே இது சட்டவிரோதமானது எனவும் கூறியுள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்கள் குழந்தையாகக் கருதப்படுவார்கள் என்றும், அவர்கள் லிவ்-இன் உறவில் இருக்க முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்