#Live : 2021-22ல் நாட்டின் வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் பேட்டி.!

Default Image

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால் ஏப்ரல் 14 ஆம் தேதி முடிவடைய இருந்த ஊரடங்கு, மே 3 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த நிலையில் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டு முடங்கி இருப்பதால் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் கடந்த 27-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு சலுகைகளை அறிவித்தார். இதையடுத்து இன்று தற்போது மீண்டும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.

  • கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாக கவனித்து வருகிறது.
  • வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ஆர்பிஐ உறுதி செய்துள்ளது; இக்கட்டான சூழலிலும் வங்கிகள் இயங்குகின்றன.
  • கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஏற்பட்டிருப்பது மிகப்பெரும் பொருளாதார சவால்.
  • கொரோனாவுக்கு எதிரான போருக்கு ஆர்பிஐ முழுமையாக தயாராக உள்ளது.
  • உலகளவில் பொருளாதார நிலையற்றத் தன்மை நிலவி வருகிறது.
  • 2021-22-ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 % ஆக இருக்கும்.
  • கொரோனா பாதிப்பால் கச்சா எண்ணெய் விலையிலும் நிலையற்றத் தன்மையே நீடிக்கிறது.
  • கொரோனா பரவல் காரணமாக நாட்டின் மின்சார தேவை 20% முதல் 25% வரை குறைந்துள்ளது.
  • ஆட்டோ மொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனை மார்ச் மாதத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளது.
  • உலகிலேயே ஜிடிபி வளர்ச்சி கணிசமாக உயர்வு கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
  • இந்தியாவின் வளர்ச்சி 1.9% என ஐஎம்எஃப் கணித்துள்ளது. இது ஜி-20 நாடுகளில் அதிகம்.
  • இந்தியாவில் கொரோனா பரவாமல் தடுப்பதே தற்போது முக்கிய நோக்கமாக இருக்கிறது.
  • ஊரடங்கு காலக்கட்டத்தில் இணையதள பயன்பாடு மற்றும் இணையதள பணிப்பரிமாற்ற சேவை அதிகரித்துள்ளது.
  • சிறு, குறு தொழில் துறையினருக்கு கடன் வழங்க ஏதுவாக வங்கிகளில் பணம் கையிருப்பு உள்ளதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • இந்தியாவில் அரிசி, கோதுமை இருப்பு உள்ளதால் தட்டுப்பாடு ஏற்படாது. இந்தாண்டு நெல் பயிரிடப்படும் பரப்பளவு 37%ஆக அதிகரித்துள்ளது.
  • ரிவர்ஸ் ரெப்போ வட்டிவிகிதம் 4 லிருந்து 3.75 ஆக குறைப்பு. இது 0.25 % குறைக்கப்பட்டுள்ளது.
  • அவசர தேவைக்காக ரிசர்வ் வங்கியிடம் இருந்து 60% வரை கூடுதலாக மாநில அரசுகள் கடன் பெறலாம்.
  • கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்வதற்காக மாநில அரசுகள் கூடுதலாக கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்