#LIVE: #BUDGET2022 – தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை!
2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல்.
2022-23-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது, பல்வேறு துறைகளில் மத்திய அரசு புரிந்த சாதனைகளை அவர் பட்டியலிட்டு பாராட்டினார். அவரைத் தொடர்ந்து, மக்களவை, மாநிலங்களவையில் மத்திய பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், இன்று 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (காகிதமில்லாத டிஜிட்டல் முறையில்) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4-வது மத்திய பட்ஜெட் இதுவாகும் என்பது குறிப்பிடப்படுகிறது. இந்த பட்ஜெட் உரையில்,வருமான வரி வரம்பு உயர்வு,வீட்டு லோன் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்:
- 2022-23ம் நிதியாண்டுக்கான நாட்டின் கடன் பற்றாக்குறை 6.4%-ஆகவும், செலவினங்கள் ரூ.39.45 லட்சம் கோடியாக இருக்கும் என கணிப்பு.
- கொரோனா காலகட்டத்திலும் ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் ரூ.1.40 லட்சம் கோடி வசூலித்து சாதனை.
- ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து 4வது மாதமாக ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது.
- 2022 ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியாக அதிகரிப்பு.
- வெட்டப்பட்ட மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள், கற்களுக்கான சுங்கவரி 5% ஆக குறைப்பு.
- வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை. உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாகவே தொடரும்.
- தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை.
- இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் உபகரணங்களுக்கு வரி குறைப்பு.
- மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கும் TDS சலுகை.
- கூட்டுறவு சங்கங்களுக்கான வரி விதிப்பு 15% ஆக குறைப்பு.
- விர்ச்சுவல், டிஜிட்டல் சொத்துக்கள் விற்பனை வருவாய்க்கு 30% வரி விதிப்பு.
- ஸ்டார்ட் அப்களுக்கு ஊக்க தொகை அளிக்கும் திட்டம் மேலும் ஒருவருடம் நீட்டிப்பு.
- பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சிகள் மூலம் வரும் வருமானத்தில் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
- ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பு.
- திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்வோருக்கு 2 ஆண்டுகள் அவகாசம்.
- கூடுதல் வருமானத்தை கணக்கில் காட்டி கூடுதல் வரி செலுத்த விரும்புவோருக்கு திருத்தப்பட்ட கணக்கு தாக்கல் வசதி.
- வருமான வரிக்கணக்கு தாக்கலில் திருத்தம் செய்ய அனுமதி, வரி செலுத்துவபர்கள் அப்டேட் செய்யப்பட்ட கணக்கை தாக்கல் செய்யலாம் என அறிவிப்பு.
- 5 உயர்கல்வி நிறுவனங்களை தரம் உயர்த்த ரூ.1250 கோடி நிதி ஒதுக்கீடு!
- மாணவர்களுக்கு அனிமேஷன், VFX, டிஜிட்டல் விளையாட்டுகள் தயாரிப்பு ஆகியவற்றில் திறனை மேம்படுத்த திட்டங்களை வடிவமைக்க சிறப்புக்குழு.
- உள்நாடு நிறுவனங்களிடம் இருந்து ராணுவத்திற்கு தேவையான தளவாடங்களை வாங்க முன்னுரிமை
- விரைவில் விற்பனைக்கு வரும் LIC பங்குகள்.
- நகர்ப்புற மேம்பாட்டுக்காக ரூ.280 கோடி செலவில் திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்படும்.
- மாநிலங்களுக்கு உதவ ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு.
- அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்த மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
- ரிசர்வ் வங்கி மூலம் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும். டிஜிட்டல் கரன்சி மூலம் இனைய பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும்.
- 2022-2023 இல் மூலதனச் செலவினங்களுக்கான செலவு 35.4% அதிகரித்து ரூ.7.50 லட்சம் கோடியாக உள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.9% ஆகும்.
- அரசின் மூலதன செலவினங்களுக்கு ரூ.7.5 லட்சம் கோடி ஒதுக்கீடு. இது கடந்தை ஆண்டை விட 35.4% அதிகம்.
- பொருளாதார வளர்ச்சிக்கு தனியாரின் பங்கீடு மூலதனமாக உள்ளது.
- பணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்க அனைத்து அமைச்சகங்களும் பயன்படுத்தும் வகையில் ஆன்லைன் பணம் செலுத்தும் திட்டம் தொடங்கப்படும்.
- நில ஆவணங்களை கணினிமயமாக்கி, ‘ஒரே நாடு – ஒரே பத்திரப்பதிவு’ திட்டம் ஊக்குவிக்கப்படும்.
- 2025க்குள் அனைத்து கிராமங்களிலும் ஃபைபர் ஆப்டிக் மூலம் இணைய வசதி ஏற்படுத்தப்படும். அனைத்து கிராமங்களிலும் பொது மற்றும் தனியார் துறை பங்களிப்பில் இணைய வசதி ஏற்படுத்தப்படும்.
- 2030 ஆண்டுக்குள் 280 கிகா வாட் மின்சாரம் சூரிய ஒளி மூலம் தயாரிக்க இலக்கு, 19500 கோடி ரூபாய் சூரிய ஒளி மின்சார தயாரிப்பு பொருள்களை உருவாக்குவதற்காக ஒதுக்கீடு.
- இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒலி, ஒளி, வரைகலை சார்ந்த பணிகள் ஊக்குவிக்கப்படும்.
- நகர திட்டமிடலுக்கு உயர்மட்டக்குழு அமைக்கப்படும்.
- ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க அனுமதி.
- நடைமுறைக்கு ஒவ்வாத 1,486 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளது, இது வர்த்தகம் புரிவதை எளிதாக்கும்.
- மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சகி இயக்கம், வாத்சல்யா இயக்கம், ஊட்டச்சத்து 2.0 இயக்கம் ஆகிய 3 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிப்பு.
- மின்சார வாகனங்களுக்காக ஊரகப்பகுதிகளில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்.எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளை மாற்றிக் கொள்ளும் வசதி கொண்டுவரப்படும்.
- 5ஜி மொபைல் சேவைகள் வரும் நிதியாண்டில் கொண்டுவரப்படும்.
- வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்காக ரூ.2.7 லட்சம் கோடி ஒதுக்கீடு.
- வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களுக்காக வரும் நிதியாண்டில் ரூ.1500 கோடி ஒதுக்கீடு.
- இ.பாஸ்போர்ட்டுகள் அறிமுகப்படுத்தப்படும். இதில் உள்ள சிப் வைக்கப்பட்டிருக்கும். இது சர்வதேச பயணங்களை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்படும் என பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.
- மின்னணு பாஸ்போர்ட் வரும் நிதியாண்டிலிருந்து வழங்கப்பட உள்ளது.
- 5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் மின்னணு முறையில் இணைக்கப்பட்டு, பணப் பரிமாற்றத்திற்கு உதவும் வகையில் மேம்படுத்தப்படும்.
- நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் வங்கிகளின் 75 டிஜிட்டல் வங்கி யூனிட்கள் நிறுவப்படும்.
- விவசாயிகளுக்கு ரூ.2.37 லட்சம் கோடி குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்கப்பட்டுள்ளது.
- நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும்.
- ரூ.44 ஆயிரம் கோடி மதிப்பில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
- பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ.48,000 கோடி ஒதுக்கீடு. வீடில்லாத 18 லட்சம் பேருக்கு 2023 ஆம் ஆண்டுக்குள் வீடுகள் கட்டித்தரப்படும்.
- ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு திட்டத்தின்கீழ் 60,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 3.8 கோடி இல்லங்களுக்கு இணைப்பு வழங்கப்படவுள்ளது.
- தொலைபேசி மூலம் கவுன்சிலிங்க் பெறும் வகையில் தேசிய மனநல சுகாதார திட்டம் தொடங்கப்படும்
- ஊரக மாணவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி கோவிட் பாதிப்பு காரணமாக இரண்டு வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ளதால் புதிய கல்வி தொலைக்காட்சி சேனல்களை உருவாக்க முடிவு.
- 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு மாநில மொழிகளில் பாடம் நடத்த 200 டிவி சேனல்கள் அறிமுகப்படுத்தப்படும்.
- ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி என்ற திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படுகின்றது.
- தொலைக்காட்சிகள் மூலமாக கல்வி முறையை செயல்படுத்தும் திட்டத்தின் கீழ் புதிதாக 200 சேனல்கள் உருவாக்கப்படும்.
- டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் நாடு முழுவதும் உருவாக்கப்படும்.
- மெட்ரோ ரயில் திட்டங்கள் புதிய வசதிகளுடன் செயல்படுத்தப்படும்.
- இந்தியாவில் உட்கட்டமைப்புகளை உலகத் தரத்தில் மேம்படுத்துவதில் அரசு உறுதியுடன் உள்ளது.
- நதிகள் இணைப்பு தொடர்பான 5 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- காவிரி – பெண்ணாறு இணைப்பு திட்டம் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுக்கு பின் நிறைவேற்ற நடவடிக்கை.
- கங்கை- கோதாவரி, கிருஷ்ணா, காவிரி நதிகள் இணைப்பு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதி கிடைத்தவுடன் நதிகள் இணைப்பு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும்.
- சிறுகுறு தொழில்களுக்கான அவசர கடன் உறுதி திட்டம் மார்ச் 2023ம் ஆண்டு வரை நீட்டிப்பு.
- இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும்.
- குடிமக்களின் வாழ்க்கை தரத்தை வலுப்படுத்துவதே இந்த அரசின் முதன்மையான நோக்கம்.
- விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் தானியங்களின் அளவு அதிகரிக்கப்படும்.
- 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் அடுத்த 3 ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும். 100 சரக்கு முனையங்கள் அமைக்கப்படும்.
- நாட்டின் தேசிய நெடுஞ்சாலை வரும் நிதியாண்டில் 25,000 கி.மீ. தொலைவுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ளது.
- நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.27% ஆக இருக்கும் என கணிப்பு.
- One station, One product திட்டம் உள்ளூர் வணிகத்திற்கு உதவியாக இருக்கும், பொருட்கள் விநியோக பாதையை மேம்படுத்தும்.
- இளைஞர்கள், பெண்கள், ஏழை, எளிய மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும்.
- அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் தயாரிப்பு.
- வெளிப்படைத் தன்மையுடன் நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
- ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு பரிமாற்றம் செய்யப் பட்டுள்ளது.
- சுதந்திரம் பெற்று 75-வது ஆண்டில் நாம் இருந்தாலும், நமது இலக்கு இந்தியா 100 என்பதுதான்.
- தற்சார்பு இந்தியா திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
- சுகாதாரத் துறைக்கு முக்கியத்துவம் அளிப்பதை கொள்கையாக கொண்டு இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
- மேக் இன் இந்தியா திட்டம் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
- அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
- ஆத்ம நிபார் பாரத் திட்டத்திற்கு மக்களிடயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கொரோனா பரவலால் சரிவடைந்த பொருளாதாரத்தை சரி செய்து வருகிறோம்.
- நிதி உள்ளடக்கம் மற்றும் நேரடி பணப் பயன் பரிமாற்றம் ஆகியவற்றின் மூலமாக நாட்டின் ஏழை மக்களுக்கு சேவை புரிய அரசு எண்ணம் கொண்டுள்ளது.
- ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
- தடுப்பூசி போடும் பணிகளை வேகப்படுத்தியதால் பொருளாதார வளர்ச்சி சாத்தியமானது.
- உலகின் பெரிய நாடுகளில் இந்தியாவே மிக வேகமாக பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது.
- பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.