#Live: 20 லட்சம் கோடி யாருக்கு.? நிதியமைச்சரின் 3ம் கட்ட முக்கிய அறிவிப்புகள்.!

Default Image

ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டத்தின் மூன்றாம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் வெளியிட்டு வருகிறார். 

பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டத்திற்கான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த இரு தினங்களாக வெளியிட்டு வருகிறார். முதல் கட்ட அறிவிப்பில், சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்துவற்கான திட்டங்களை அறிவித்திருந்தார். இதையடுத்து நேற்று 2 ம் கட்ட அறிவிப்பில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், சிறு விவசாயிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோருக்கான 9 முக்கிய திட்டங்கள் வெளியிட்டார். தற்போது, சுயசார்பு திட்டத்தில் 3ம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டு வருகிறார். 

  • விவசாயம், கால்நடை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட 11 துறைகளுக்கான திட்டங்கள் இன்று அறிவிக்கப்படுகின்றன.
  • இன்று வெளியிடப்படும் 11 அறிவிப்புகளில் 8 அறிவிப்புகள் விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்க்காக வெளியிடப்படுகின்றது.
  • எஞ்சிய 3 திட்டங்கள் விவசாயத்துறைக்கான அரசாங்க முறைகளின் மாற்றங்கள் குறித்து அறிவிப்பு வெளியீடு.
  • சணல், பருப்பு உற்பத்தியில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.
  • இந்தியாவில் பெரும்பாலானோர் விவசாயத் துறையைச் சார்ந்தே உள்ளனர். நம்நாட்டு விவசாயிகள் அனைத்துச் சவாலான சூழல்களில் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.
  • பொதுமுடக்கத்தின் போது 2 மாதங்களில் ரூ.74,300 கோடிக்கு உணவு தானியங்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
  • பொதுமுடக்கத்தின் போது விவசாயிகளிடம் இருந்து 560 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
  • பீமயோஜனா திட்டத்தில் விவசாயிகளுக்கு 6,400 கோடி நிலுவை தொகை கொடுக்கப்பட்டுள்ளது.
  • பிரதமரின் கிஷான் திட்டத்தில் ரூ.18,700 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
  • விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்வதற்கான உள்கட்டமைப்பு மேம்படுத்துவதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு. இதில், குளிர்பதனக் கிடங்குகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த செலவிடப்படும்.
  • வேளாண் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
  • குறு உணவு நிறுவனங்களை உருவாக்குவதற்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
  • விவசாயப் பொருள்கள் சர்வதேச அளவில் விளம்பரப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
  • தமிழகத்தில் விளைவிக்கப்படும் மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றை சர்வதேச அளவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
  • குறிப்பிட்ட பகுதிகளில் பிரபலமான விவசாய பொருட்களை கண்டறிந்து அவற்றின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
  • மீன்வளத்துறையை மேம்படுத்துவதற்காக பிரதமரின் மீன்வளத் திட்டத்தில் ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
  • கடல், உள்நாட்டு மீன்பிடிப்பு, பண்ணை மீன் வளர்ப்பை ஊக்குவிக்க ரூ.11 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
  • மீன்பிடி உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.9,000 கோடி நிதி ஒதுக்கீடு.
  • 5 ஆண்டுகளில் கூடுதலாக 70 லட்சம் டன் மீன் உற்பத்திக்கு வழிவகை செய்யப்படும்.
  • கால்நடைகளுக்கான நோய் தடுப்பு திட்டத்துக்காக ரூ.13,343 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • 100% கால்நடைகளுக்கு நோய்த் தடுப்பு மருந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
  • கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு.
  • கங்கை நதி கரையில் 2 பக்கங்களிலும் 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் மூலிகை தோட்டங்கள் உருவாக்கப்பட்டு, மூலிகை பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் உற்பத்தி ஊக்குவிக்கப்படும். இதன் மூலம் 5000 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட முடியும் என நம்பிக்கை.
  • மருத்துவ மூலிகை பயிர்களின் சாகுபடிக்காக ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு. அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் ஹெக்டேரில் மூலிகை பயிர்கள் பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நான்காயிரம் கோடி ரூபாய் நிதி பயனுள்ளதாக அமையும்.
  • தேசிய மருத்துவ தாவர வாரியம் 2.25 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மருத்துவ தாவரங்களை வளர்ப்பதை ஊக்குவித்துள்ளது.
  • தேனீ வளர்ப்பு மற்றும் தேன் உற்பத்தி ஆகியவற்றை ஊக்குவிக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு. இதனால் 2 லட்சம் தேன் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவார்கள்.
  • அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தும் செய்யப்படும்.
  • மாநிலங்களுக்கு இடையே விளைபொருள்களின் தடையற்ற வர்த்தகம் நடைபெறும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும்.
  • புதிய சட்டத்தின்படி விவசாயப் பொருள்களை ஆன்லைனில் சந்தைப்படுத்த வழிவகை செய்யப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Polling - snow
vivo V50 is coming
PM Modi speak in Parliament session
thiruparankundram
Harbhajan Singh about abhishek sharma
Madurai
music director sam cs