மஹாராஷ்டிராவில் ஏற்பட்டு வரும் திருப்பங்களை தாங்கமுடியாமல் லீவ் கேட்ட பேராசிரியர் ..!

Default Image

பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கூட்டணியை  முறித்து கொண்டு சிவசேனா காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க பேச்சு வார்த்தை நடத்தி வந்தது.
நேற்று முன்தினம் சிவசேனா , தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்தக் கூட்டம் முடிந்த பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் செய்தியாளரிடம் பேசிய போது  உத்தவ் தாக்கரே முதலமைச்சர் கூறினார்.
இந்த செய்தி  நேற்றைய செய்திதாள்களின் முதல் பக்கத்தில் கூட்டணி ஆட்சி அமைய உள்ளதாக தலைப்பு செய்தியாக வந்தது.ஆனால் இந்த செய்தியை சிலர் படிக்க முன்பு அல்லது படித்துக் கொண்டிருக்கும்போதே தொலைக்காட்சியில் ஒரு  திடீர் திருப்பமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் ., தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக இருந்த அஜித் பாவர் துணை முதல்வராக ஆளுநர் முன் பதிவு ஏற்றதாக செய்தி வந்தது.
இந்த செய்தியை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில்  உள்ள சந்திரபூர் அருகே இந்த செய்தியை பார்த்த ஆங்கில பேராசிரியர் ஜஹீர் சையது அதிர்ச்சி தாங்க முடியவில்லை என்றும் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது
எனவே தனக்கு விடுமுறை வேண்டும் என கல்லூரி நிர்வாகத்திடம் விடுமுறை கேட்டுள்ளார். அதற்க்கு  அந்த கல்லூரி நிர்வாகம் விடுமுறையை  நிராகரித்து விட்டது. இந்த காரணத்திற்காக விடுமுறை கேட்ட விண்ணப்பம் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்