சீனாவுடனான மோதலில் வீரமரணமடைந்த 20 ராணுவ வீரர்களின் பட்டியல் வெளியீடு.!
இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே நடந்த தாக்குதலில் இந்திய ராணுவம் தரப்பில் சுமார் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்களின்பெயர் விவரம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் இரு தரப்பிலும் ராணுவ வீரரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக இந்திய ராணுவ வீரர்கள் இருவரும், ஒரு ராணுவ அதிகாரியும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அதன் பின் நேற்று இரவு வெளியாக தகவலின் படி, இந்திய ராணுவம் தரப்பில் சுமார் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. தற்போது மேலும், 17 வீரர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அந்த 20 ராணுவ வீரர்களின் பட்டியலில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த பட்டியலில் தமிழக வீரரான ஹவில்தார் பழனி பெயரும் மேலும்,குந்தன் குமார், அமன் குமார், நாயக் தீபக் சிங், சந்தன் குமார், கணேஷ் ராம், கே.கே.ஓஜா, ராஜேஷ் ஓரோன், கணேஷ் ஹஸ்தா, சி.கே பிரதான், மன்தீப் சிங், ராம்சோரன், சுனில்குமார், கர்னல் சந்தோஷ்பாபு, ஜெய் கிஷோர் சிங், பிபுல்ராய், குர்தேஜ் சிங், அங்குஷ், குர்வீந்தர் சிங்,சட்னம் சிங் ஆகியோர் வீரமரணம் அடைந்தனர்.