Categories: இந்தியா

2022-இல் மிகவும் மாசுபட்ட இந்திய நகரங்களின் பட்டியல்.. இந்த நகரம் தான் முதலிடம்..!

Published by
செந்தில்குமார்

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் வெளியிடப்பட்ட பட்டியலில் 2022 ஆம் ஆண்டில் மிகவும் மாசுபட்ட நகரங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தரவுகளின் படி 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் டெல்லி முதலிடம் வகிக்கிறது. டெல்லியில் பாதுகாப்பான வரம்பை விட இரண்டு மடங்கு அதிகமாக PM 2.5 (Particulate Matter) மாசு மற்றும் மூன்றாவது அதிகபட்ச சராசரியாக PM10 வகை மாசுக்கள் உள்ளது

தேசிய தூய்மை காற்றுத் திட்டத்தின் (NCAP-National Clean Air Program) அறிக்கையில் தேசிய தலைநகரான டெல்லியில் PM2.5 (Particulate Matter) மாசு நான்கு ஆண்டுகளில் 7 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது, 2019 ஆம் ஆண்டில் ஒரு கன மீட்டருக்கு 108 மைக்ரோகிராமில் இருந்து 2022 ஆம் ஆண்டில் ஒரு கன மீட்டருக்கு 99.71 மைக்ரோகிராமாக குறைந்துள்ளது என்று கூறுகிறது.

தேசிய தூய்மை காற்றுத் திட்டம் (NCAP) என்பது 2019 இல் தொடங்கப்பட்ட 122 நகரங்களில் சிறந்த காற்றின் தரத்தை கண்காணிப்பதற்கான இந்தியாவின் முதன்மைத் திட்டமாகும். மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பட்டியலின் படி, ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் இரண்டாவது இடத்தையும், உ.பி.யின் காசியாபாத் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. பீகாரின் பாட்னா மற்றும் முசாபர்பூர் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களிலும், உ.பி.யின் நொய்டா மற்றும் மீரட் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

Published by
செந்தில்குமார்

Recent Posts

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!  

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

10 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

11 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

14 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

15 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

15 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

1 day ago