கேரளாவில் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகே உள்ள மதுபான கடையில் பதுக்கப்பட்ட மதுபானங்களை கைப்பற்றி அப்புறப்படுத்த காவல்துறை முடிவு செய்திருக்கிறார்கள். இது சுமார் 6000 லிட்டர் பியர், பிராந்தி மற்றும் ரம் ஆகியவற்றை அப்புறப்படுத்த முடிவு செய்த அவர்கள் அதே பகுதியில் உள்ள ஓர் இடத்தில் குழி தோண்டி மொத்த மதுபானங்களையும் கொட்டி இருக்கிறார்கள். இது அங்கு நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த குடிநீர் பைப்லைனில் கலந்திருக்கிறது. பின்னர் அங்குள்ள வீடுகளில் உள்ளவர்கள் குடிநீருக்காக வீட்டுக் குழாயைத் திறக்கும் போது மதுபானம் வந்திருக்கிறது.
அதைத்தொடர்ந்து அங்குள்ள சாலமன் குடியிருப்பில் வசிக்கும் ஜோஷி, என்பவரின் வீட்டில் இரு தினங்களுக்கு முன்பு சமையலறையில் உள்ள தண்ணீர் குழாயைத் திறக்கும் போது, பழுப்பு நிறத்தில் தண்ணீர் வந்தது. இதை நுகர்ந்து பார்த்தால் மதுபான வாசனை அடித்தது, என தகவல் கூறப்படுகிறது. இதன் காரணமாக மாணவர்கள் பள்ளிக்கோ, பெற்றோர்கள் வேலைக்கோ, அன்று செல்ல முடியவில்லை என்று தெரிவித்தனர். இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் காவல்துறையிடமும், நகராட்சி நிர்வாகத்திடமும் புகார் அளித்திருக்கிறார்கள். தமது தவறை உணர்ந்த காவல்துறையினர் அந்த பகுதி குடியிருப்புவாசிகளுக்குத் தற்காலிகமாகக் குடிநீர் வழங்கி இருக்கிறார்கள்.
இதற்கு மத்தியில் அந்த பகுதிக்கு குடிநீர் வழங்கும் கிணறும் இதன் காரணமாக மாசடைந்திருக்கிறது. இது தொடர்பாக விளக்கம் பெற காவல் துறையைத் தொடர்பு கொண்டோம் ஆனால், அவர்கள் பதிலளிக்கவில்லை என்று தெரிவித்தனர். பின்னர் அதிகாரி ஒருவர் கூறுகையில், வழக்கமாக இப்படி கைப்பற்றப்படும் மதுபான பாட்டில்களை எரித்துவிடுவோம். ஆனால் மாசு ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் இதுபோன்று குழி வெட்டி புதைத்திருக்கிறார்கள் என்று கூறினார். இது குறித்து முறைப்படி புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒரு காவல்துறை அதிகாரி குறிப்பிட்டார்.
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…