டெல்லி அரசு மதுபானக் கடைகளை திறப்பதற்கான நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டித்துள்ளது. இந்த நடவடிக்கை அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கவும் உதவும் என்று ஒரு அதிகாரி கூறினார். கொரோனா வைரஸ் கட்டாயமாக ஊரடங்கு பிறப்பிப்பதற்கு முன்பு, டெல்லியில் உள்ள மதுபான கடைகள் இரவு 10 மணி வரை திறந்தே இருக்கும்.
ஆனால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பின்னர் மே மாதத்தில் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டபோது ஒரு மணிநேரம் குறைக்கப்பட்டு காலை 10மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், கலால் துறை வெளியிட்டுள்ள உத்தரவின்படி, காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பதிலாக காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள 863 மதுபானக் கடைகளில், 475 கடைகளை டெல்லி அரசு நடத்துகின்றன. சுமார் 389 மதுபான கடைகள் தனியாருக்கு சொந்தமானவை என கூறப்படுகிறது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…