புதுச்சேரியில் கலால் வரி உயர்வால் மதுபானம் விலை உயர்ந்தது!
புதுச்சேரி மாநிலத்தில் மதுபான வகைகளுக்கு கலால் வரி உயர்த்தப்பட்டு இருப்பதால் அங்குள்ள மதுபானங்களின் விலையும் அதிகரித்துள்ளது.
இந்திய அளவில் மிகவும் குறைவாக மதுபான விற்கப்படும் மாநிலங்களில் முதன்மையானது புதுச்சேரி.இதனால் அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள் உட்பட ஏராளமானோர் அங்கு சென்று மது அருந்தி வருவது வழக்கம். அம்மாநில கலால் துறைக்கு ஆண்டுதோறும் மதுபானம் மூலம் மட்டும் 800 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.
இந்நிலையில், தற்போது புதுச்சேரி கலால் துறை வரியை உயர்த்தியுள்ளது. இதனால், பீர் ரகங்கள் 10 முதல் 15 ரூபாய் வரையிலும் மற்ற ஆப் பாட்டில்கள் 30 முதல் 45 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளது.