Arvind Kejriwal: அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாதது தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் எம்.பி சஞ்சய் சிங் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பியது. அமலாக்கத்துறை சார்பில் கெஜ்ரிவாலுக்கு 8 முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் ஒரு முறை கூட அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறைக்கு வரும் 12 ஆம் தேதிக்கு மேல் வீடியோ கான்பரன்சிங் மூலம் பதிலளிக்க உள்ளதாக கூறி இருந்தார். இதற்கிடையில் டெல்லி ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் விசாரணைக்கு மறுப்பதாக கூறி கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி விசாரணை ஆணையத்தின் சம்மனை புறக்கணித்ததற்காக அமலாக்கத்துறை தொடுத்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜரானார். டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் வந்ததால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜரான கெஜ்ரிவாலுக்கு நீதிபதி ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். மேலும், ரூ.15,000 பிணைதொகை மற்றும் ரூ.1 லட்சத்திற்கான உத்தரவாதம் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…