ஒடிசா மாநிலத்தில் இந்த நேரங்களில் மட்டுமே மதுபானம் விற்பனை.!
ஒடிசாவில் மதுபான கடைகள் இந்த நேரங்களில் மட்டும் திறக்க வேண்டும்.
ஒடிசா மாநிலத்தில் மதுபானங்கள் வீட்டு விநியோகத்திற்கு கூடுதலாக காலை 7 மணி முதல் மாலை 6 மணிக்கு பதிலாக காலை 10:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை திறக்க அனுமதித்துள்ளது.
இதற்கு முன்பு, ஊரடங்கு காரணமாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் மதுபான கடைகள் மூடப்பட வேண்டும் என்று மாநில கலால் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில். மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிலையான வழிகாட்டுதல்களின்படி, மாநிலம் முழுவதும் பார்கள், பப்கள் மற்றும் கிளப்புகளை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுள்ளது.
அந்த வகையில், டாஸ்மாக் உள்ளெ 50 சதவீத வாடிக்கையாளர்களுடன், 6 அடி தூரத்தை பின்பற்றி முகக்கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று டாஸ்மாக் சங்க தலைவர் கூறினார்.