பீகார் சட்டசபை வளாகத்தில் மதுபாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டது வெட்கக்கேடானது – தேஜஸ்வி யாதவ்!
பீகார் சட்டசபை வளாகத்தில் மதுபாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டது வெட்கக்கேடானது என அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வரின் அறையில் இருந்து சில தொலைவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலியான வெவ்வேறு ப்ராண்டுகளுடைய மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இந்த காலி மதுபாட்டில்கள் முதல்வரின் அறைக்கு அருகில் கிடந்தது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் அவர்கள், முதல்வராக இருப்பதற்கான உரிமை நிதிஷ்குமாருக்கு இல்லை எனவும், பீகார் மாநில முதல்வரின் அறைக்கு அருகில் காலி மதுபாட்டில்கள் கிடந்தது வெட்ககேடான விஷயம் எனவும் கூறியுள்ளார்.