உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, கடந்த சில நாட்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிற நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, 5-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சந்தேகம் இருந்தால் விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு 2-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.15-ம் தேதி முதல் நீச்சல் குளம் திறக்கலாம் என்றும், திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் திறக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு பூங்காக்கள், சுற்றுலா தளங்கள் அக்.15ம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கடைகள், தனியார் அலுவலகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுபான கடைகள் மற்றும் அமர்ந்து சாப்பிடும் மதுபான கூடங்கள் கலால் விதிமுறைப்படி இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் உள்ள கடற்கரை சாலைகளில் இரவு 9 மணி வரை மட்டுமே நடைப்பயிற்சி மேற்கொள்ள புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது.
மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்…
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…