சாலையில் குட்டிகளுடன் சுற்றி திரிந்த சிங்கங்கள்..!

Default Image

குஜராத் சாலையில் குட்டிகள் உட்பட ஐந்து சிங்கங்கள் சுற்றி வந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

குஜராத் மாநிலத்தில் அம்ரேலி மாவட்டத்தில் ஐந்து சிங்கங்கள் சாலையில் சுற்றி திரிந்துள்ளது. அம்ரேலியில் பிரபல கிர் காடுகள் அமைந்துள்ளது. இதில் ஆசிய சிங்கங்கள் வாழ்ந்து வருகின்றது. கிட்டத்தட்ட இந்த காட்டில் 710 முதல் 730 ஆசிய சிங்கங்கள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில், அம்ரேலியில் உள்ள பிபவாவ் சாலையில் நள்ளிரவில் காட்டிலிருந்து ஐந்து சிங்கங்கள் மக்கள் குடியிருப்பு பகுதியில் நடமாடியுள்ளது. இதில் 2 குட்டிகள் உட்பட மொத்தம் 5 சிங்கங்கள் சுற்றி திரிந்துள்ளது.

இவை உணவு தேடி இப்பகுதிக்குள் நுழைந்துள்ளன. அங்கிருந்து அருகில் இருக்கும் துறைமுகத்திற்கு இந்த சிங்கங்கள் சென்றுள்ளது. இதை பார்த்து பயந்த அங்கிருந்த ஊழியர்கள் தங்களை தற்காத்து கொள்ள பாதுகாப்பான இடத்திற்குள் பதுங்கிக்கொண்டனர். மேலும், சிங்கங்கள் இருப்பது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்