சாலையில் இரைதேடி அலைந்த சிங்கங்கள்…!
குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில், பிபவாவ் சாலையில் சிங்கங்கள் இரவுநேரத்தில் இரை தேடி அலைந்த சிங்கங்கள்.
குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் பிரபல கிர் காடுகள் அமைந்துள்ளது. இந்த காடுகள் ஆசிய சிங்கங்களின் இருப்பிடமாக உள்ளது. இந்த காட்டில் 700-க்கும் மேற்பட்ட சிங்கங்கள் உள்ளன. இந்நிலையில், பிபவாவ் சாலையில் சிங்கங்கள் இரவுநேரத்தில் இரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது. இரண்டு குட்டிகளுடன் மொத்தம் ஐந்து சிங்கங்கள் சாலையில் இங்கும் அங்குமாக சுற்றி திரிந்து உள்ளது. பின் இந்த சிங்கங்கள் அந்தப் பகுதியிலிருக்கும் துறைமுகத்துக்குள் நுழைந்துள்ளது.
இதனைப் பார்த்த ஊழியர்கள் அலறியடித்து கொண்டு பாதுகாப்பான இடங்களில் பதுங்கியுள்ளனர். இதனையடுத்து இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். யாருக்கும் அச்சுறுத்தல் இல்லாமல், சிங்கங்கள் சாலையில் நடந்து செல்லும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.