ஹைதராபாத் விலங்கியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கம் கொரோனவால் பாதிப்பு..!

Published by
Hema

ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி.

இந்தியாவில் உள்ள ஹைதராபாத் நேரு விலங்கியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவம் இந்தியாவில் நடப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் சிங்கங்களுக்கு ஊசி மூலம் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு மூக்கு, தொண்டை மற்றும் சுவாசக் குழாயிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மூலம் சோதனை செய்ததில் தொற்றானது வெளியிலிருந்து பரவியிருக்காது என்று கூறப்பட்டுள்ளது.

விலங்குகள் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு உலகின் பிற இடங்களில் உள்ள மிருகக்காட்சிசாலையின் விலங்குகளின் சார்ஸ்-கோவ் 2 (கொரோனாவை ஏற்படுத்தும் வைரஸ்) இருப்பது கண்டறியப்பட்டது. விலங்குகள் இந்த நோயை மனிதர்களுக்கு மேலும் பரப்ப முடியும் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை.

இந்த மாதிரியான தொற்றானது இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதம் பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலையில் புலிகள் மற்றும் சிங்கங்களுக்கும், டிசம்பர் மாதம் லூயிஸ்வில் மிருகக்காட்சிசாலையில் பனிச்சிறுத்தைக்கும் இருந்தது.

இந்த தொற்று இந்தியாவில் ஏற்பட்டுள்ள தொற்று வகையைச் சேந்தது இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் வீட்டு பூனைகள், நாய்கள்போன்ற விலங்குகளுக்கு கூட கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) சார்ஸ்-கோவ் -2 குறித்த முழுமையான ஆவணத்தைக் கொடுத்துள்ளது.

அதில் செல்லப்பிராணிகளிடையே செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

  • பூனைகளை முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே வைத்திருங்கள், நாய்களை மற்றவர்களிடமிருந்து குறைந்தது 6 அடி தூரத்தில் வைத்திருங்கள்
  • அதிக மக்கள் கூடும் பொது இடங்களைத் தவிர்க்கவும்.
  • செல்லப்பிராணிகளுக்கு மாஸ்க் அணிவிக்க வேண்டாம். மாஸ்க் உங்கள் செல்லப்பிராணிக்கு தீங்கு விளைவிக்கும்.
  • உங்கள் செல்லப்பிராணியை ரசாயன கிருமிநாசினிகள் அல்லது ஆல்கஹால் போன்றவற்றால் துடைக்கவோ அல்லது குளிக்கவோ வைக்க வேண்டாம்.
  • நீங்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் இருந்தால்  உங்கள் செல்லப்பிராணிகளுடனும் பிற விலங்குகளுடனும் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும். முடிந்தால், நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது உங்கள் செல்லப்பிராணிகளை உங்கள் வீட்டு பராமரிப்பில் இருப்பதை தவிர்க்கவும்.
  • செல்லப்பிராணியுடன் தொடர்புகொள்வது முத்தமிடுவது மற்றும் உணவு அல்லது படுக்கைகளைப் பகிர்வது உள்ளிட்டவற்றை முடிந்தவரை தவிர்க்கவும்.
  • கையில் க்ளவுஸ் அணிந்து செல்லபிராணிகளை குளிப்பாட்டுங்கள், பின் உங்கள் கையை உடனடியாக சோப்பு போட்டு சுத்தம் செய்துவிடுங்கள்.
Published by
Hema

Recent Posts

”உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” – லிவிங் ஸ்மைல் வித்யா காட்டம்.!

”உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” – லிவிங் ஸ்மைல் வித்யா காட்டம்.!

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…

3 hours ago

பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!

மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…

4 hours ago

க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!

சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…

5 hours ago

INDvsENG : 3வது ஒருநாள் போட்டி… சாதனை படைக்க காத்திருக்கும் இந்திய வீரர்கள்…

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…

5 hours ago

தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…

6 hours ago

காசா பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் இது தான் நடக்கும்…ஹமாஸ்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!

அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…

7 hours ago