#PANAadhaarlink:இன்றே கடைசி நாள்;மீறினால் ரூ.1000 அபராதம் – மத்திய அரசு அறிவிப்பு!
பான் எண்ணை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி),பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு முன்னதாக 30 செப்டம்பர் 2021 முதல் 31 மார்ச்,2022 வரை நீட்டிக்கப்பட்டது.அதன்பின்னர்,எழுந்த பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
இன்றுடன் நிறைவு:
இந்நிலையில்,பான் எண்ணை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.எனவே,இன்றைக்குள் (ஜூன் 30, 2022) ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்கவிட்டால் வருமான வரிச் சட்டம் 272N இன் படி 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் எனவும்,ஜூலை 1 ஆம் தேதிக்கு பிறகு,அபராதத் தொகை ரூ.1000 ஆக செலுத்த வேண்டும் எனவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
இதனிடையே,ஆதாருடன் இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகளும் செயல்படாத பான் கார்டாக அறிவிக்கப்படும் என்று அண்மையில் மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியத்தால் அறிவிக்கப்பட்டது.
உங்கள் ஆதார் உடன் பான் எண்ணை இணைத்தல்:
உங்கள் ஆதார் அட்டையுடன் உங்கள் பான் எண்ணை இணைக்க இரண்டு வழிகள் உள்ளன.ஒரு வழி அதை எஸ்எம்எஸ் வழியாகவும் மற்றொன்று வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளம் மூலமாகவும் செய்வது.
எஸ்எம்எஸ் வழியாக இணைத்தல்:
- UIDPAN என டைப் செய்து (space) 12 இலக்க ஆதார் அட்டை எண் (space) மற்றும் 10 இலக்க PAN அட்டை எண் குறிப்பிட்டு 567678 அல்லது 56161 எண்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பவும்.
- உங்கள் பான்-ஆதார் இணைக்கும் நிலை குறித்து உங்களுக்கு ஒரு எஸ்எம்எஸ் வரும். வரி செலுத்துவோரின் பிறந்த தேதி ஆதார் மற்றும் பான் இரண்டிலும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே அது இணைக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வருமான வரித் துறை போர்டல் வழியாக இணைத்தல்:
- I-T துறையின் https://www.incometax.gov.in/iec/foportal என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்வையிடவும்.
- ‘விரைவு இணைப்புகள்’ பிரிவின் கீழ், வலைதளப்பக்கத்தின் இடது பக்கத்தில் உள்ள ‘இணைப்பு ஆதார்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் பான் எண், ஆதார் எண் மற்றும் ஆதார் அட்டைப்படி உங்கள் பெயர் போன்ற தேவையான விவரங்களை உள்ளிட வேண்டிய ஒரு புதிய பக்கத்திற்கு நீங்கள் அனுப்பப்படுவீர்கள்.
- அதன்பிறகு,உங்கள் ஆதார் அட்டையில் பிறந்த வருடம் குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே பெட்டியை டிக் குறியீடு செய்யவும்.
- UIDAI உடன் எனது ஆதார் விவரங்களை சரிபார்க்க நான் ஒப்புக்கொள்கிறேன்,’ என்று நீங்கள் ஒப்புக்கொண்டால் குறிக்கவும்.
- பின்னர்,நீங்கள் உள்ளிட வேண்டிய கேப்ட்சா குறியீடு உங்களுக்கு அனுப்பப்படும்.
- இறுதியாக ‘இணைப்பு ஆதார்’ பொத்தானைக் கிளிக் செய்து கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.