மின்னல் மனிதன் உசைன் போல்டின் வேகத்தை மிஞ்சும் கர்நாடகா இளைஞர்.? 142.5 மீட்டரை 13.62 நொடிகளில் ஓடி சாதனை.!
- கர்நாடகாவில் நடைபெற்ற எருது விடும் விழாவில் கலந்துகொண்ட வீரரான ஸ்ரீநிவாசகவுடா, 142.5 மீட்டரை வெறும் 13.62 நொடிகளில் ஓடி வெற்றி பெற்று, உசைன் போல்டின் சாதனையை முறியடித்துவிட்டார் என இணையதளத்தில் பரவி வருகிறது.
ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் மின்னல் வேகத்தில் ஓடக்கூடிய நட்சித்திர வீரர். இவர் ஓட்டபந்தியத்தில் உலக சாதனையை படைத்தது, அதனை மீண்டும் அவரே முறியடித்து சாதனை படைத்தார். பின்னர் தான் பங்கேற்கும் போட்டிகளில் வெற்றிகளை குவிக்கும் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட்டுக்கு உலக முழுவதும் ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள். இவர் 100 மீட்டர் ஓட்டபந்தியத்தில் 9.58 நொடிகளில் ஓடி உலக சாதனை படைத்திருக்கிறார். ஓட்டபந்திய போட்டியில் இவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. இந்த நிலையில் கர்நாடகாவில் நடந்த விழா ஒன்றில் ஒரு உள்ளூர் வீரர் இவரது சாதனையை முறியடித்து விட்டதாக இணையதளத்தில் கருத்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுபோல கர்நாடகாவில் நடைபெற்ற எருது விடும் விழாவில் கம்பாளா என்ற ஓட்டபந்தியத்தில் சுமார் 143 தூரத்தை தனது எருதுகளுடன் ஓட வேண்டும். அந்த ஓடக்கூடிய தளத்தில் தண்ணீர் ஊற்றப்பட்டு சேறும், சகதியுமாக இருக்கும். தங்கள் எருதுகளை முன்னே ஓடவிட்டவாறு கயிற்றை பிடித்துக் கொண்டு வீரரும் பின்னே ஓடவேண்டும். இந்த போட்டியில் கலந்துகொண்ட வீரரான ஸ்ரீநிவாசகவுடா, 142.5 மீட்டரை வெறும் 13.62 நொடிகளில் ஓடி வெற்றிபெற்றுள்ளார். இந்த விழாவில் சாதனை படைத்த இவரின் வேகத்தை சிலர் உசைன் போல்டின் சாதனையுடன் ஒப்பிட்டு பார்த்தனர். அதாவது, ஸ்ரீனிவாச கவுடா 100 மீட்டரை 9.55 நொடிகளில் ஓடியிருக்கிறார் என கணக்கிட்டு அவர்கள், இது உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த கணக்குதான் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் இதுபோன்ற வீரர்களை அரசு கவனத்தில் எடுத்து சரியான பயிற்சி வழங்கினால் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் இந்தியா பதக்கங்களை குவிக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது ஒருபக்கம் இருக்க, மாடுகளின் வேகத்தால் பின்னே ஓடுபவரின் வேகம் அதிகமாகிறது என்றும், மாடுகளோடு ஓடுவதும், களத்தில் தனியாக ஓடுவதும் ஒன்றல்ல என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருவேறுபட்ட சூழல் என்பதால் இரண்டையும் இணைத்து பார்க்கக்கூடாது என்று பதிவிட்டு வருகிறார்கள். பின்னர் எதுவாக இருந்தாலும் ஸ்ரீனிவாச கவுடா தன் ஓட்டத்தில் ஒரு சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.