ஒடிசாவில் இலகுரக பீரங்கி எதிர்ப்பு சோதனை வெற்றி..!
இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட இலகுரக பீரங்கி எதிர்ப்பு சோதனை வெற்றியடைந்துள்ளது.
ஒடிசா கடற்கரையில் இன்று சோதிக்கப்பட்ட ஏவுகணை எடைகுறைந்த ராணுவ டேங்கர்களை தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வான் இலக்கை தரையிலிருந்து தாக்கக்கூடிய இந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணையில் அதிநவீனமாக உள்ள மினியேட்டரைஸ் அகச்சிவப்பு இமேஜிங் சீக்கருடன் மேம்பட்ட ஏவியோனிக்ஸ் உடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலகுரக ஏவுகணை அதிகபட்ச வரம்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணை ஆத்மனிபார்பாரத் பிரச்சாரத்திற்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளது. இது இந்திய ராணுவத்தை பலப்படுத்தக்கூடியது என்றும் இந்த ஏவுகணை விரைவில் இந்தியாவின் விமானப்படையில் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும், இன்று ஆகாஷ் ஏவுகணை பரிசோதனையும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.