டெல்லியில் லிப்ட் விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Default Image

டெல்லியில் கட்டுமான பனியின் போது திறந்த நிலையில் இருந்த லிப்ட் விழுந்ததில் 3 பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். 

டெல்லியிலுள்ள டி.டி.ஏ கட்டுமான இடத்தில் எதிர்பாராத விதமாக திறந்த நிலையில்  இருந்த லிப்ட் விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்து துவாரகா மோரில் உள்ள தாரக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பன்னா லால் யாதவ், பசந்த், மங்கல் பிரசாத் சிங் ஆகியோர் தான் உயிரிழந்த மூவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதுடன், இயந்திரங்கள் தொடர்பாக அலட்சியமாக நடந்து கொள்ளுதல், உயிருக்கு ஆபத்தை விளைவித்தல், மரணத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்