குழந்தையை கழிவறையிலிருந்து தூக்கி வீசிய பெண்னுக்கு ஆயுள்தண்டனை…!
மும்பையை சேர்ந்த பார்மர் எனும் பெண் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பதாக செய்த குற்றத்திற்காக தற்போது மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கியுள்ளது. 2010ஆம் ஆண்டு பார்மர் எனும் இந்த பெண்ணிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை கழிவறைக்கு எடுத்துச் சென்ற பெண் ஜன்னலில் இருந்து கீழே போட்டு விட்டார்.
இதனால் குழந்தை தலையில் பலத்த காயமடைந்து அன்றைய தினமே உயிரிழந்துள்ள நிலையில், இது தொடர்பான விசாரணை மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் இந்த குற்றத்திற்காக பார்மர் எனும் அந்த பெண்ணிற்கு தீர்ப்பு வழங்கி உள்ளது.
அதன்படி குழந்தையை கழிவறையில் இருந்து தூக்கி எறிந்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அந்த குழந்தை உயிர் இழந்து விட்டதால் கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அப்பெண் அதை மறுத்தாலும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரித்த பொழுது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் அந்த பெண் தனது கட்டிலில் இருந்த குழந்தையை காணவில்லை என்று பதறி அழுதுள்ளார். அதன் பின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ச்சி செய்தபோது, குழந்தையுடன் கழிவறைக்கு சென்ற பெண் வெளியில் வரும் பொழுது குழந்தை இல்லாமல் திரும்பி வந்தது தெரியவந்துள்ளது. உறுதியான ஆதாரங்கள் இருப்பதால் இந்த பெண் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.