பிரச்சனை முடிந்தது., இந்தி இல்லை., இப்போது ஆங்கிலம்! – LIC விளக்கம்!
இன்று காலை முதல் இந்தி மொழியில் இருந்த LIC இணையதளம் தற்போது மீண்டும் பழையபடி ஆங்கிலத்தில் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது.
டெல்லி : இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமானLICயின் இணையதள முகப்பு பக்கமானது இன்று காலை முதல் இந்தி மொழியில் காணப்பட்டது. மேலும், மொழியை தேர்வு செய்யும் பட்டனில் கூட இந்தி மொழி இருந்ததால், இந்தி தெரியாத பயணர்கள் மிகவும் குழப்பம் அடைந்தனர்.
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தில் இந்தி திணிக்கப்பட்டது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியும் கண்டனத்தை பதிவு செய்தது.
இவ்வாறு, தொடர் எதிர்ப்புகள் வந்ததை அடுத்து, இது வெரும் தொழில்நுட்ப கோளாறு தான், நாங்கள் சரி செய்து வருகிறோம். சில மணி நேரங்களில் வழக்கம் போல் LIC இணையதளம் ஆங்கிலத்தில் இயங்க ஆரம்பித்து விடும். மேலும், இந்தி தவிர மற்ற பிரதான மொழிகளில் LICயில் இயங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எல்.ஐ.சி தரப்பிலிருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு எதிர்ப்புகள் வந்ததை அடுத்து, தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு தற்போது மீண்டும் பழையபடி, எல்ஐசி இணையதளம் முழுக்க ஆங்கிலத்தில் மாற்றப்பட்டுவிட்டது. இதில் இந்தி மொழி வேண்டும் என்றால் மொழி தேர்வை கிளிக் செய்து மாற்றிக் கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.