இன்று முதல் (மே 4-ம் தேதி) எல்.ஐ.சி-யின் பொது பங்கு விற்பனை தொடங்கவுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி-யின் பங்குகளை, பங்குச் சந்தைகளில் விற்க முடிவு செய்திருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசின் பங்குகளில் 5% பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கான வரைவு திட்ட அறிக்கையை எல்ஐசி நிறுவனம் கடந்த பிப்.12-ஆம் தேதி தாக்கல் செய்திருந்தது.காப்பீட்டு நிறுவனத்தின் 5 % பங்குகளை or 31.6 கோடி பங்குகளை மத்திய அரசு விற்கும் என்று கூறியிருந்தது.
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (LIC) மெகா ஆரம்ப பொது பங்கு வெளியீடு மே 4 முதல் மே 9 நடைபெறும் என தகவல் வெளியாகியிருந்தது.அதன்படி,எல்ஐசியின் 3.5% பங்குகளை ஆரம்பப் பொதுப் பங்கு வழங்கல் மூலம் மத்திய அரசு விற்பனை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.இதன்மூலம், ரூ.21 ஆயிரம் கோடி நிதி திரட்டவும் மத்திய அரசு முடிவு செய்திருந்தது.
இந்த நிலையில்,ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) பங்குகள் விற்பனை ஐபிஓ வாயிலாக இன்று முதல் (மே 4-ஆம் தேதி) திறக்கப்பட்டு, மே 9-ஆம் தேதி முடிவடையும் என்று எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த வகையில்,பொதுமக்கள்,பாலிசிதாரர்கள்,எல்ஐசி ஊழியர்களுக்கான பங்கு விற்பனை இன்று தொடங்கவுள்ளது.
அதன்படி,இன்று முதல் வெளியிடப்பட உள்ள எல்.ஐ.சி-யின் பொது பங்கு ஒன்றின் விலை ரூ.902 – ரூ.949 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாலிசிதாரர்களுக்கு ரூ.60 தள்ளுபடி மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ரூ.45 தள்ளுபடியுடன், பங்கு ஒன்றின் விலை ரூ.902-ரூ.949 ஆக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.குறிப்பாக,ஒரு ஒதுக்கீட்டில் 16 பங்குகள் இருக்கும் எனவும்,அதிகபட்சமாக ஒருவர் 14 ஒதுக்கீடுகள் வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 9 வரை எல்.ஐ.சி-யின் 3.5% பங்குகளை,பொதுப்பங்கு (ஐபிஓ) வழியாக விற்று ரூ.21 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே,கடந்த திங்கட்கிழமை பெரிய முதலீட்டாளர்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில்,இரு நாட்களில் மட்டும் ரூ.5620 கோடிக்கு பங்குகளை வாங்க பெரிய முதலீட்டாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…
சென்னை : மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர்…