நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியின் பங்குகளை,பங்குச் சந்தைகளில் விற்க முடிவு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னதாக மத்திய பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து,எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசின் பங்குகளில் 5% பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில்,அதற்கான வரைவு திட்ட அறிக்கையை எல்ஐசி நிறுவனம் செபியிடம் கடந்த பிப்.மாதம் 12 ஆம் தேதி தாக்கல் செய்திருந்தது.அதில் காப்பீட்டு நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை அல்லது 31.6 கோடி பங்குகளை மத்திய அரசு விற்கும் என்று கூறியிருந்தது.
இருப்பினும்,ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக பங்குச் சந்தைகளில் நிலவும் ஏற்ற இறக்கம் காரணமாக ஐபிஓ திட்டங்கள் தலைகீழாக மாறியது.இதனால்,பொதுப்பங்கு வெளியீட்டின் அளவை 3.5 சதவீதமாகக் குறைக்கும்படி எல்ஐசி நிறுவனம் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில்,லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின்(LIC) மெகா ஆரம்ப பொது பங்கு வெளியீடு மே 4 முதல் மே 9 நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,எல்ஐசியின் 3.5 சதவீதப் பங்குகளை ஆரம்பப் பொதுப் பங்கு வழங்கல் மூலம் மத்திய அரசு விற்பனை செய்ய வாய்ப்புள்ளது.இதன்மூலம்,ரூ.21 ஆயிரம் கோரி நிதி திரட்டவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இதற்டையில்,ஏப்ரல் 27 ஆம் தேதி வாரியம் கூடி சரியான அளவு மற்றும் விலையை தீர்மானிக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…