இந்தி மயமான LIC! வெளியான புது விளக்கம்!

LIC இணையதளம் முழுக்க இந்தி மொழியாக மாறியது குறித்து, LIC தரப்பு கூறுகையில், இது தொழில்நுட்ப கோளாறு. தற்போது சரிசெய்யப்பட்டு வருகிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

LIC Hindi

டெல்லி : இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி (LIC) நிறுவனத்தின் இணையதள பக்க முகப்பானது ஆங்கிலத்தில் தான் செயல்பட்டு வந்தது. மொழி தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் இருக்கும். அதில் தேவை இருப்பின் இந்தி மொழி தேர்வு செய்து கொள்ளலாம்.

ஆனால், இன்று காலை முதல் LIC இணையதளம் முழுக்க இந்தி மொழியில் மட்டுமே இயங்கி வந்தது. மேலும், மொழி தேர்வு செய்யும் பட்டன் தேர்வும் இந்தி மொழியில் இருந்ததால், மொழி மாற்றம் செய்வதும் இந்தி தெரியாத மற்ற மொழி பேசும் மக்களுக்கு சவாலானதாக அமைந்தது.

மேலும், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தின் இணையதளம் முழுக்க இந்தி மயமானாதால், மற்ற மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற விமர்சனங்களும் LIC நிறுவனம் மீது விழுந்தது. இப்படியான சூழலில் தான் LIC தரப்பு இதுகுறித்து விளக்கம் அளித்ததாக தனியார் செய்தி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அதில் “LIC இணையதள பக்கத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அதனை சரி செய்து வருவதாகவும், இன்னும் சில மணி நேரங்களில் இப்பிரச்னை சரியாகி மீண்டும் ஆங்கிலத்தில் முகப்பு பக்கம் தெரியவரும். அதே போல இந்தி தவிர்த்து பிராந்திய மொழிகளில் LIC தளம் இயக்கவும் பணிகள் மேற்கொண்டு வருகிறோம்” எனக் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

rohit sharma and virat kohli
Rohit sharma - Virat kohli
Andhra Pradesh CM N Chandrababu naidu
senthil balaji edappadi palanisamy
Dragon Movie Budget
ADMK Chief secretary Edappadi Palanisamy - Madras High court