உணவகங்களில் சேவை கட்டணம் விதிப்பது சட்டவிரோத செயல்..!

Default Image

உணவகங்களில் சேவை கட்டணம் விதிப்பது சட்டவிரோதம் என்று நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இன்று நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, உணவகங்களில் பில்களுக்கு ‘சேவை கட்டணம்’ விதிக்க வேண்டாம். அப்படி விதித்தால் ‘சட்டவிரோதம்’ என்று நடவடிக்கை எடுக்கப்படும். விருந்தோம்பல் நிறுவனங்கள் மற்றவர்களுடன் இணைந்து கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் சட்ட கட்டமைப்பை விரைவில் உருவாக்குவோம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. நுகர்வோரின் நலன்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் உணவகக் கட்டணங்கள் மீதான சேவைக் கட்டணம் குறித்து விவாதிப்பதற்காக வியாழன் அன்று இந்திய ஹோட்டல் மற்றும் உணவக சங்கங்களின் கூட்டமைப்பு என்ற விருந்தோம்பல் தொழில் சங்கத்தை ஒரு கூட்டத்திற்கு அழைத்திருந்தது. அதில் இந்த விருந்தோம்பல் கூட்டத்தின் முன்பு ஒரு முக்கிய விஷயத்தை எடுத்துரைத்துள்ளது. அதில் ‘டிப்’ எனப்படும் சேவைக் கட்டணம் என்பது உணவகம் அல்லது உணவகங்கள் போன்ற ஒத்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கு நுகர்வோர்களால் செலுத்தப்படும் தொகையாகும். இது சட்டவிரோத செயல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய ஹோட்டல் மற்றும் உணவக சங்கங்களின் கூட்டமைப்பு என்ற விருந்தோம்பல் தொழில் சங்கத்தின் துணைத் தலைவர் குர்பக்ஷிஷ் சிங் கோஹ்லி முன்பு ஒரு அறிக்கையில் தெரிவித்ததாவது, கடையின் ஊழியர்களின் நலனுக்காக சேவைக் கட்டணம் ஒரு நன்மை பயக்கும் விஷயமாக கருதப்படுகிறது. மேலும் இது சட்ட விரோதமாக எதுவும் இல்லை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்திய ஹோட்டல் மற்றும் உணவக சங்கங்களின் கூட்டமைப்பு என்ற விருந்தோம்பல் தொழில் சங்கத்தின் இணை கெளரவச் செயலர் பிரதீப் ஷெட்டி இது குறித்து தெரிவிக்கையில் சேவைக் கட்டணத்தை வசூலிப்பது உணவகத்தின் விருப்பப்படியே அமைந்துள்ளது. நுகர்வோருக்கு சேவைக் கட்டணத்தைச் செலுத்துவதில் உடன்பாடு இல்லை எனில் அதனை பில்லில் இருந்து நீக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்