தற்கொலை செய்துகொண்ட சிறைக்கைதியின் வயிற்றுக்குள் சிக்கிய தற்கொலைக்கான கரணம் கொண்ட கடிதம்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் எனும் இடத்தில் உள்ள மத்திய சிறையில் அஸ்கர் அலி என்பவர் கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் தண்டனை அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில் அண்மையில் இவர் திடீரென சிறைக்குள்ளேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சிறைக்கைதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களுக்கே அதிர்ச்சியான சம்பவம் காத்திருந்து உள்ளது.
அவரது வயிற்றில் பிளாஸ்டிக் கவரில் சுற்றியபடி தற்கொலைக்கான காரணம் அடங்கிய கடிதமொன்றை மருத்துவர்கள் கண்டுள்ளனர். அந்த கடிதத்தை காவலர்களிடம் ஒப்படைத்த போது அக்கடிதத்தில் சிறைக்காவலர்கள் தன்னை அதிக அளவில் துன்புறுத்தி வந்ததாகவும் அவர்களோடு சேர்த்து மேலும் ஐந்து சிறைக்கைதிகளின் பெயரையும் எழுதி வைத்து, இதுதான் நான் தற்கொலை செய்வதற்கான காரணம் ஏற்கனவே சிறையில் இருக்கக் கூடிய தனக்கு அதிக துன்புறுத்தல் சிறை காவலர்கள் மற்றும் சக கைதிகளால் ஏற்பட்டுள்ளதாக அவர் எழுதியுள்ளார். தற்பொழுது இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த வாரம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில்…
மும்பை: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த புதிய வரி விதிப்பு தான் தற்போது உலக நாடுகளில் தலைப்பு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு புதிய வரிகளை அறிவித்தார். இதில்…
கோவை : மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெறும் நிலையில் ரூ. 4 இலட்சம் மதிப்பிலான…
சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…