“பாஜகவுடன் இணைந்து பணியாற்றுவோம்” – மதசார்பற்ற ஜனதா தள தலைவர்!

HD Kumaraswmay

கர்நாடகா மாநிலத்தின் நலன் கருதி பாஜகவுடன் இணைந்து பணியாற்றுவோம் என மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி அறிவிப்பு.

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தின் நலன் கருதி, பாஜகவுடன் எதிர்க்கட்சியாக இணைந்து செயல்படத் தீர்மானித்துள்ளதாக ஜேடி(எஸ்) தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், பாஜவுடன் கூட்டணி அமைப்பது குறித்து நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் போது முடிவு செய்யப்படும். கூட்டணி குறித்து முடிவெடுக்க எனது தந்தை தேவகவுடா எனக்கு அதிகாரம் வழங்கியிருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. பாஜக மற்றும் ஜனதா தளம் (எஸ்) ஆகிய இரு கட்சிகளும் எதிர்க்கட்சிகள் என்பதால், மாநில நலன் கருதி இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் நான் ஏற்கனவே கூறியுள்ளேன். எங்கள் கட்சியின் எம்எல்ஏக்கள் எப்படி பாஜகவுடன் இணைந்து செல்வது என்று ஆலோசித்தனர்.

அனைத்துத் தலைவர்களின் கருத்தையும் சேகரித்து, கட்சி அமைப்பிற்காக, 31 மாவட்டங்களிலும் காங்கிரஸ் அரசுக்கு எதிராகக் குரல் எழுப்ப, அனைத்து சமூகங்களின் பிரதிநிதித்துவத்துடன் 10 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் கவுடா அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்கள் உள்ளன. எனவே, தேர்தல் வரும்போது பார்க்கலாம். கட்சியை ஒழுங்கமைக்க அறிவுறுத்தப்பட்டது.

மேலும், கட்சி தொடர்பாக எந்த இறுதி முடிவையும் எடுக்க எனக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, ஜேடி(எஸ்) என்.டி.ஏவுடன் கூட்டணி அமைக்க சாத்தியம் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், எச்.டி.குமாரசாமி இவ்வாறு கூறியுள்ளார். இதனிடையே, 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடகா சட்டசபைக்கு கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களையும், பாஜக 66 இடங்களையும், ஜேடி(எஸ்) 19 இடங்களையும் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்