இணைந்து செயல்படுவோம் – மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!
தமிழகத்தின் சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து.
தமிழக சட்டமன்ற தேர்த்லின் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி 158 இடங்களிலும், அதிமுக 76 இடங்களிலும் முன்னிலை பெற்று பல இடங்களில் வெற்றி அறிவித்து வருகின்றனர். அதிகமான இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளதால், தமிழகத்தில் முக ஸ்டாலின் தனிபெருபான்மையுடன் ஆட்சி அமைக்கிறார்.
திமுகவின் வெற்றிக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களும், தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என்றும் கொரோனாவை ஒழிக்க இணைந்து பாடுபடுவோம் எனவும் கூறியுள்ளார்.
மேலும், தேசத்தின் வளர்ச்சியையும், மாநிலத்தின் தேவைகளையும் கணக்கில் கொண்டு ஒன்றிணைத்து செயல்படுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரீட்வீட் செய்து, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முக ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். ஸ்டாலின் பதிவில், மாநிலத்தின் தேவைகளை நிறைவேற்ற மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்.
மேலும் கூட்டாட்சி ஒத்துழைப்பு மூலம், நாங்கள் கொரோனாவை வென்று தொற்றுநோய்க்கு பிந்தைய வளர்ச்சிக் கதையை பட்டியலிடுவோம் என்று நான் நம்புகிறேன் என்றும் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Congratulations to Thiru @mkstalin and @arivalayam for the victory in the Tamil Nadu assembly elections. We shall work together for enhancing national progress, fulfilling regional aspirations and defeating the COVID-19 pandemic.
— Narendra Modi (@narendramodi) May 2, 2021
Thank you Hon’ble Prime Minister @narendramodi for your kind wishes.
I look forward to working with the Union Government to fulfill aspirations of the State.
Through federal co-operation, I am sure we will overcome COVID-19 and chart the post-pandemic growth story. https://t.co/6WjCyxO5ky
— M.K.Stalin (@mkstalin) May 2, 2021