காவேரி விவகாரம்! சட்ட போராட்டம் நடத்துவோம் – சித்தராமையா

siddaramaiah cm

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து ஆலோசிக்க பெங்களூரு விதான சவுதாவில் அனைத்து கட்சி கூட்டம்  இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார், முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான பிஎஸ் எடியூரப்பா, ஜேடி(எஸ்) தலைவர் எச்டி குமாரசாமி, பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, மக்களவை எம்பி சுமலதா அம்பரீஷ் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்துக்கு செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் சித்தராமையா, காவிரி நீர் வழக்கில் சட்டப்போராட்டம் நடத்துவோம். சட்ட போராட்டம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். ஒருமித்த கருத்துடன் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக தரப்பு வாதத்தை வைப்போம். தமிழகத்திற்கு உரிய நீர் தருவதற்குத்தான் மேகதாது அணை கட்ட வேண்டும் என வலியுறுத்துகிறோம் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்