முடிந்தால் எங்கள் கட்சியை கவிழ்த்து பார்க்கட்டும்! பாஜக-வுக்கு சவால் விடுக்கும் உத்தவ் தாக்கரே!
முடிந்தால் எங்கள் கட்சியை கவிழ்த்து பார்க்கட்டும் என பாஜக-வுக்கு சவால் விடுத்துள்ளார் உத்தவ் தாக்கரே.
சிவசேனா கட்சியின் தலைவரான உத்தவ் தாக்கரே, சிவாஜி பார்க் எதிரில் உள்ள சுவந்திரியவீர் வீர்சாவக்கர் மண்டபத்தில் நடைபெற்ற தசரான பேரணியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், மஹாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான ஆட்சி, கடந்த 1 மாதங்களுக்கு முன்பதாக ஆட்சியை பிடித்தது. முடிந்தால் எங்கள் ஆட்சியை கவிழ்த்து பார்க்கட்டும் என பாரதிய ஜனதாவுக்கு சவால் விடுகிறேன். பாரதிய ஆனதா, எதிர்க்கட்சி ஆட்சியின் மீது கவனம் செலுத்தாமல், நாட்டு விவகாரங்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்துத்துவ கொள்கை பற்றி பலர் சந்தேகம் எழுப்பினர். ஆனால்,பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் அவர்கள் தங்கள் வாசல்களை மறைத்துக் கொண்டனர் என்றும், ஜி.எஸ்.டி தோல்வி அடைந்ததால், அதை கைவிட்டு பழைய வரி திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பீகார் மக்களுக்கு, இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அப்படியானால், மற்ற மாநிலத்தவர்கள், வங்கதேசம், கஜகஸ்தானில் இருந்து வந்தவர்களை? என கேள்வி எழுப்பியுள்ளார்.