பாசிச பாஜக செயலை முறியடிக்க மம்தா பானர்ஜி_யுடன் என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.மேலும் அவர் மத்திய அரசு C.B.I_யை தவறாக பயன்படுத்துகின்றது . முறையாக அனுமதி பெறாமல் விசாரணை நடத்துவது ஏற்புடையது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு தொடர்ந்து இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் , பாசிச பாஜகவின் செயலை முறியடிக்க மம்தா பானர்ஜி அவர்களுடன் தோளோடு தோள் நிற்போம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…