மகனின் உடலை தானம் செய்வோம்- உக்ரைனில் கொல்லப்பட்ட நவீன் தந்தை..!

உக்ரைனின் கார்கிவ் நகரில் கொல்லப்பட்ட இந்திய மாணவர் நவீன் பெற்றோர்கள் தங்கள் மகனின் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அளித்த நவீனின் தந்தை சங்கரப்பா, எனது மகன் மருத்துவத் துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால் அது நடக்கவில்லை. நவீனின் உடலை மற்ற மருத்துவ மாணவர்களாவது படிப்புக்கு பயன்படுத்தலாம். இதனால் நவீன் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறினார்.
நவீன் உடல் நாளை வருகிறது:
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ரஷ்யா-உக்ரைன் துப்பாக்கிச் சண்டையின் போது உயிரிழந்த நவீனின் உடல் திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு உக்ரைனில் இருந்து பெங்களூரு விமான நிலையத்தை வந்தடையும் என்று முன்பு கூறியிருந்தார். தற்போது நவீன் உடல் நாளை வரும் என அரசு அறிவித்தது. நவீன் குடும்பத்திற்கு கர்நாடக முதல்வர் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
நவீன் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்:
நாளை மறுநாள் காலை 9 மணிக்கு மகனின் உடல் கிராமத்திற்கு வந்து சேரும் என நவீனின் தந்தை தெரிவித்தார். பிறகு சடங்குகள் முடித்த பின்னர் மருத்துவப் படிப்புக்காக தாவங்கேரி எஸ்எஸ் மருத்துவமனைக்கு உடலை தானம் செய்வதாக கூறினார். நவீன் உடல் பொதுமக்களின் பார்வைக்காக நாளைமறுநாள் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஷமி விளையாடிய விதம் என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை!” கங்குலி ஓபன் டாக்
February 21, 2025