காந்தியடிகளின் சிந்தனைகளை நசுக்க நினைப்பவர்களை எதிர்கொள்வோம் – காங்கிரஸ்

Mallikarjun Kharge

இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி  தேசத்தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி டெல்லி பிர்லா மாளிகையில் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நாள் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய துக்க நாளாக அமைந்தது. நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அன்றைய தினம் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கொள்ளப்படுகிறது.

அன்றைய தினமே இந்தியாவில் தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், மகாத்மா காந்தியின் 76வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அவரின் புகழ் குறித்து பலர் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 19 பாகிஸ்தானியர்களை மீட்ட இந்தியா ..!

இந்த நிலையில், காந்தியடிகளின் சிந்தனைகளை நசுக்க நினைப்பவர்களை எதிர்த்து போராடுவோம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், தியாகிகள் தினத்தில், நமது தேசத்தின் தார்மீக திசைகாட்டியான மகாத்மா காந்தி அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்.

அவரது இலட்சியங்களையும், சிந்தனைகளையும் அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராக நாம் போராட உறுதியளிக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவைப் பாதுகாக்கவும், நம் மக்களிடையே நீதி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை உறுதிப்படுத்தவும் அனைத்தையும் செய்வோம் என பதிவிட்டுள்ளார். இதனிடையே, பீகார் மாநிலம் அராரியாவில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்