நமது இலக்கை அடைய ஒன்றிணைந்து பாடுபடுவோம் – பிரதமர் மோடி

- அசோசெம் அமைப்பின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
- சரிவில் இருந்து பொருளாதாரத்தை நிலைபெறச் செய்திருக்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அசோசெம் அமைப்பின் நூற்றாண்டு விழா தலைநகர் நடந்தது. இந்த கருத்தரங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.அவர் பேசுகையில், சரிவில் இருந்து பொருளாதாரத்தை நிலைபெறச் செய்திருக்கிறோம் .நமது இலக்கை அடைய ஒன்றிணைந்து பாடுபடுவோம்.பொருளாதாரத்தை வேகப்படுத்தவும், நவீனமயமாக்கவும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்னேறி வருகிறோம் .
தொழில்துறையினரின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக கவனம் செலுத்தி வருகிறோம் . விவசாயிகள், தொழிலாளர்கள், கார்ப்பரேட்டுகள் ஆகியோருடைய குறைகளை கேட்கும் ஒரு அரசு இந்தியாவில் இருக்கிறது.
இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும், என்று நான் சொன்னபோது, சிலர் அதை அடைய முடியாது என்றனர், ஆனால் அவற்றை இலக்காக எடுத்துக்கொண்டு அதற்காக பணியாற்றி வருகின்றோம் என்று பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025