“பாஜகக்கு அஞ்சுபவர்கள் காங்கிரஸில் இருந்து ஆர்.எஸ்.எஸ்.க்கு சென்று விடுங்கள்” – ராகுல் காந்தி

Default Image

பாஜகவை எதிர்கொள்ள தயங்கினால் வெளியேறலாம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பிரிவை சேர்ந்த உறுப்பினர்களிடம் காணொளி வாயிலாக பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற எம்பியுமான ராகுல் காந்தி, பாஜகவை பார்த்து அஞ்சுபவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி ஆர்.எஸ்.எஸ்.க்கு சென்று விடுங்கள். காங்கிரசுக்கு அச்சமற்ற தலைவர்களே தேவை. தைரியமான தலைவர்கள் பலர் வெளியில் உள்ளனர். அவர்களை கட்சிக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்டவர்கள் காங்கிரஸ் கட்சிக்குத் தேவையில்லை. அச்சமற்றர்கள் தான் காங்கிரஸ் கட்சிக்குத் தேவை. அதுவே கட்சியின் சித்தாந்தம் என காங்கிரஸில் இருந்து வெளியேறிய ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாத், நாராயண் ராணே, ராதாகிருஷ்ண விக்கி படேல், நடிகை குஷ்பு உள்ளிட்டோரை சுட்டிக்காட்டி பேசியதாக கூறப்படுகிறது.

மேலும், காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே ஒரு சிலர் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாகவும் காங்கிரஸ் தலைமை முழு மூச்சுடன் பாஜகவின் பல ஆர்எஸ்எஸ் ஆதரவு நிலையைக் கடுமையாக விமர்சித்து வருகையில் அதை ஆதரிக்கவும் ஒரு சிலர் உள்ளனர் என குறிப்பிட்டார்.

இதனிடையே, பல்வேறு துறைகளைச் சோ்ந்த இளம் தொண்டா்களுடனும் அவா் பேசினாா். அப்போது, சமூக ஊடகப் பிரிவு தொண்டா்கள் தன்னுடன் பேசுவதற்கு அச்சப்படத் தேவையில்லை என்றும் சகோதரரிடம் பேசுவதைப்போல் தன்னிடம் பேசலாம் எனவும் ராகுல் தெரிவித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் தலைமை கட்சிக்குள் பல அதிரடியான மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மூத்த தலைவர் ராகுல் காந்தி இவ்வாறு பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்