“வண்ணங்களின் திருவிழா;மகிழ்ச்சியின் நிறத்தை கொண்டு வரட்டும்” – பிரதமர் மோடி வாழ்த்து!

Default Image

ஹோலி என்பது வடஇந்தியாவில் பிரபலமான பண்டிகையாகும், இப்பண்டிகை ஆண்டுதோறும் இந்தியாவில் மட்டுமின்றி ஜமைக்கா, தென்னாப்பிரிக்கா, மொரிஷியஸ், பிஜி, மலேசியா,சிங்கப்பூர், யுனைடெட் கிங்டம், யுனைடெட் ஸ்டேட்ஸ் போன்ற நாடுகளில் உள்ள இந்தியாவை சேர்ந்த மக்களாலும் கொண்டாடப்படுகிறது. ,

ஹோலி பண்டிகை,ஹோலிக்கு முந்தைய நாள் இரவு ஹோலிகா தகனத்துடன் தொடங்குகின்றன,அடுத்த நாள் காலை அனைவரும் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி கொண்டாடி மகிழ்வர்.பிறகு ஹோலி உணவுகள்,உணவு மற்றும் பானங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.மாலையில், மக்கள் ஆடை அணிந்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பார்க்க செல்வர்.

இந்நிலையில்,ஹோலி பண்டிகை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதனை முன்னிட்டு, அன்பு, பாசம் மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளமான இந்த வண்ணங்களின் திருவிழா உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் நிறத்தை கொண்டு வரட்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:

“உங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான ஹோலி வாழ்த்துக்கள். பரஸ்பர அன்பு, பாசம் மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளமான இந்த வண்ணங்களின் திருவிழா உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் ஒவ்வொரு நிறத்தையும் கொண்டு வரட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்