பீகார் சட்டமன்ற தேர்தலில் 243 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 3 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இதன் முடிவுகள் நாளை நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்குப்பதிவு எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.
243 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 3 கட்டங்களாக 71 தொகுதி , 94 தொகுதி ,78 தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்துள்ளது. இதன் வாக்குப்பதிவு 57.05 சதவீதமாக பதிவாகியுள்ளது , 2015 ல் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு எண்ணிக்கை 56.66 சதவீதமாக இருந்துள்ளது .
இந்த ஆண்டு பெண் வாக்காளர் எண்ணிக்கை 59.69 சதவீதமாகவும் , ஆண் வாக்காளர்கள் 54.68 சதவீதமாகவும் உள்ளனர். இந்த தேர்தலில் ஆண் வாக்களர்களை விட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.
கொரோனாவால் இந்தியா மிகப்பெரிய சேதத்தை பொருளாதாரத்தில் சந்தித்து வரும் சூழ்நிலையில், நாட்டில் நடைபெற்ற முதல் பெரிய தேர்தல் இதுவாகும். கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு ஆளும் அரசுக்கு எதிராக திருப்பும் என்று அரசியல் விமசர்கள் கூறி வந்தனர்.
அதன்படியே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் வெற்றி பெறும் என்று வெளியாகியுள்ளது. COVID-19 நோயாளிகள் அல்லது தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களுக்கு வசதியாக, தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு காலத்தை ஒரு மணி நேரம் மேலாக நீட்டித்தது.
தொற்றுநோயை அடுத்து சுமார் 5.30 லட்சம் தேர்தல் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
சென்னை : கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
சென்னை : மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் உடல் அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில்…
க்கெபெர்ஹா : இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரை விளையாடி வருகிறது. இதில்…
சென்னை : தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான டெல்லி கணேஷ் வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு காலமானார். அன்னாரது…
சென்னை : உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த முத்த நடிகர் டெல்லி கணேஷின் (80) மறைவு பெரும்…
சென்னை : அரசு முறைப் பயணமாக 2 நாள் சுற்றுப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகரில் கள ஆய்வை நேற்று…