‘அவர்களுக்கு நீதி கிடைக்கட்டும்’ – நாகலாந்து சம்பவம் குறித்து பிரியங்கா காந்தி ட்வீட்..!

நாகலாந்தில் இருந்து வந்த செய்தி இதயத்தை உலுக்குகிறது. உறவினர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழந்த வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன்.
நாகாலாந்தின் ரைஃபிள்ஸ் பாதுகாப்புப் படையினருக்கு மோன் மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று மாலை பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடத்தினர். அமோன் மாவட்டத்தில் உள்ள ஓடிங் மற்றும் திரு கிராமங்களுக்கு இடையே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏராளமான கூலித் தொழிலாளர்கள் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் தவறுலதாக பாதுகாப்புப் படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியதில் ஒரு வீரர் உயிரிழந்தார். மேலும், பாதுகாப்பு படையினரின் வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
இதுகுறித்து பிரியங்கா காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நாகலாந்தில் இருந்து வந்த செய்தி இதயத்தை உலுக்குகிறது. உறவினர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழந்த வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன். அவர்களுக்கு நீதி கிடைக்கட்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
Heartbreaking news coming out of Nagaland, my deepest condolences to all the bereaved families. They deserve justice.
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) December 5, 2021