சவார்க்கரை இழிவு படுத்தியது நாட்டு மக்களையே இழிவு படுத்தியதற்கு சமம் என மகாராஷ்டிரா முதல்வர் பேச்சு.
பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக ராகுல்காந்தி மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இவருக்கு 2 ஆண்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, ராகுல்காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி எனது அடுத்த பேச்சுக்கு பயந்து தான் நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டேன். அவரது கண்களில் பயத்தை காண்கிறேன். நான் நாடாளுமன்றத்தில் பேசுவதை பிரதமர் மோடி விரும்வில்லை என தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து பாஜக மன்னிப்பு கோர கூறிய செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், என் பெயர் சாவர்க்கர் அல்ல, காந்தி. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என தெரிவித்தார்.
சாவர்க்கர் கௌரவ யாத்திரை
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மகாராஷ்டிரா முதல்வரும் தற்போதைய சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, ராகுல் காந்தியின் பேச்சால் மகராஷ்டிரா மக்கள் கொதிப்படைந்துள்ளனர். சாவர்க்கரின் தியாகத்தை தெரிவிக்க மாநிலம் முழுவதும் சாவர்க்கர் கௌரவ யாத்திரை நடத்துவோம்.
வீர் சவார்க்கரை குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது கண்டனத்துக்குரியது. சவார்க்கரை இழிவு படுத்தியது நாட்டு மக்களையே இழிவு படுத்தியதற்கு சமம்; முடிந்தால் ராகுல் காந்தி அந்தமான் சிறையில் ஒருநாள் இருந்து பார்க்கட்டும் எனக் கூறியுள்ளார்.
சென்னை : விஜய் சேதுபதி இன்று (ஜனவரி 16) தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால், மீண்டும்…
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…