திரிபுராவில் இருந்த லெனின் சிலையை, சட்டசபை தேர்தல் முடிவு வெளியான 2 நாட்களுக்குள் பாஜகவினர் அகற்றியுள்ளனர்.
திரிபுரா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கிறது. தேர்தல் முடிவு வெளியான 2 நாட்களுக்குள் பாஜகவினர் செய்த செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பாஜகவினர், பெலோனியா நகரில் இருந்த லெனின் சிலையை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக இருந்த லெனின் சிலையை அகற்றும்போது பாரத் மாதா கி ஜெய் என்று பாஜகவினர் கோஷமிட்டனர்.
சிலையை அகற்றியதை பார்த்து இடதுசாரிகள் கோபம் அடைந்தனர். பாஜகவுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிலையை நாங்கள் அகற்றவில்லை என்றும் இடதுசாரிகளால் அடக்கி வைக்கப்பட்ட மக்கள் கோபத்துடன் அகற்றினர் என்று பாஜக தெரிவித்துள்ளது.
லெனின் சிலையை அகற்றி அதன் தலையை துண்டித்து கால்பந்து போன்று பயன்படுத்தி பாஜகவினர் கால்பந்தாட்டம் விளையாடினார்கள் என்று சிபிஎம் நிர்வாகி தபஸ் தத்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜேசிபி இயந்திரத்தின் டிரைவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ரூ. 3 லட்சத்தில் அமைக்கப்பட்ட லெனின் சிலை திரிபுராவில் கடந்த 2013ம் ஆண்டு நிறுவப்பட்டது.
மேலும் தகவல்களுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…