மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், திரிபுராவில் லெனின் சிலைகளை பாரதிய ஜனதா கட்சியினர் இடித்து அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தாவில் பேரணியாக சென்ற அக்கட்சியினர் பாரதிய ஜனதா கட்சியனர் மற்றும் மோடிக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். திடீரென அவர்கள் மோடியின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தி ஆர்பாட்ட்ததில் ஈடுபட்டனர். திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது ஜனநாயக விரோத நடவடிக்கை என அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பாரதிய ஜனதா நாட்டில் பாசிசத்தை வளர்க்க முயற்சிப்பதாக சாடினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவிஜீத் பேசுகையில், ஒடுக்கப்பட்ட, ஏழை மக்களுக்கான குரல் தான் தோழர் லெனின். அவரது சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.
இதனை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள யாரும் ஏற்கமாட்டார்கள் என்றார். எனவே பாரதிய ஜனதாவினரின் அத்துமீறலை கண்டித்தே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறினார். திரிபுராவில் பாரதிய ஜனதா ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து தலைநகர் அகர்தலா உள்ளிட்ட இடங்களில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் கம்யூனிஸ்ட் புரட்சியாளர் லெனின் சிலைகளை இருவேறு இடங்களில் பாரதிய ஜனதாவினர் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு இடித்து அகற்றினர். இச்சம்பவங்களால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…