திரிபுராவில் லெனின் சிலைகளை இடித்து அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

Default Image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், திரிபுராவில் லெனின் சிலைகளை பாரதிய ஜனதா கட்சியினர் இடித்து அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்து,  போராட்டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தாவில் பேரணியாக சென்ற அக்கட்சியினர் பாரதிய ஜனதா கட்சியனர் மற்றும் மோடிக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். திடீரென அவர்கள் மோடியின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தி ஆர்பாட்ட்ததில் ஈடுபட்டனர். திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது ஜனநாயக விரோத நடவடிக்கை என அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பாரதிய ஜனதா நாட்டில் பாசிசத்தை வளர்க்க  முயற்சிப்பதாக சாடினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவிஜீத் பேசுகையில், ஒடுக்கப்பட்ட, ஏழை மக்களுக்கான குரல் தான் தோழர் லெனின். அவரது சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.

இதனை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள யாரும் ஏற்கமாட்டார்கள் என்றார். எனவே பாரதிய ஜனதாவினரின் அத்துமீறலை கண்டித்தே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறினார். திரிபுராவில் பாரதிய ஜனதா ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து தலைநகர் அகர்தலா உள்ளிட்ட இடங்களில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் கம்யூனிஸ்ட் புரட்சியாளர் லெனின் சிலைகளை இருவேறு இடங்களில் பாரதிய ஜனதாவினர் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு இடித்து அகற்றினர். இச்சம்பவங்களால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்