50 ரூபாயிலிருந்து அதிகரித்து 200 ரூபாய்க்கு விற்கப்படும் எலுமிச்சை ..!
பல்வேறு பகுதிகளிலும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக சமையல் பொருட்களின் விலைகள் அதிகளவில் உயர்ந்து வருகிறது.
அந்த வகையில் குஜராத்தில் உள்ள ராஜ்கோட் காய்கறி சந்தையில் தற்போது எலுமிச்சை விலை ஒரு கிலோ 200 ரூபாய் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
முன்னதாக கிலோ 50 முதல் 60 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது எலுமிச்சையின் விலை அதிகரித்துள்ளது. கோடை காலம் தொடங்கி உள்ளதால் எலுமிச்சை விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பும் எலுமிச்சை பழத்தின் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.