13 மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்! பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ்…
மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில தேர்தல் முன்னிலை நிலவரங்களோடு 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் முன்னிலை நிலவரங்களும் வெளியாகி வருகின்றன.
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி வருகிறது. அதன்படி, மேற்குவங்கத்தில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது
உத்தரப்பிரதேசத்தில் 9 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலையில் உள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் கிருஷ்ணகுமார் முன்னிலையில் உள்ளார்.
கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடைபெற்ற 3 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. அதன்படி, சந்தூர், சிகான், சன்னப்பட்னாவில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை வகுத்து வருகிறார்கள்.
பிகாரில் நடந்த 4 சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ்(Jan Suraaj) கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அந்தக் கட்சி போட்டியிட்ட தாராரி, ராம்கர், இமாம்கஞ்ச், பெலகஞ்ச் தொகுதிகளில் ஜன் சுராஜ் 3 மற்றும் 4ம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
பிரியங்கா காந்தி தொடர் முன்னிலையில்
கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி 2,39,554 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறது. காலை 11 மணிநேர நிலவரப்படி, காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 2,39,554, வாக்குகள் பெற்று 1,57,472 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உல்ளது.