இந்துத்துவா இந்தியாவாக முடியாது.! புது போட்டோவால் சர்ச்சையை கிளப்பிய ‘காளி’ லீனா மணிமேகலை.!

Default Image

கடந்த சில நாட்களாகவே டிவிட்டரில் இந்து கடவுள் காளி பற்றிய சர்ச்சை போஸ்டர், அதன் மீதான விவாதம் என அனல் பறந்து வருகிறது. அது ஒரு ஆவண படத்திற்கான போஸ்டர், அதனை இயக்கியவர் லீனா மணிமேகலை என்றதும் அவர்கள் மீது கருத்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.

இதனால் டிவிட்டர் நிர்வாகமே பிரச்சனை ஆகிறது என அறிந்து, லீனா மணிமேகலை வெளியிட்ட அந்த புகைப்படத்தை இணையத்தில் இருந்து நீக்கி விட்டது.

பிரச்சனை இப்படி போய்க்கொண்டு இருக்க, லீனா மணிமேகலை மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

அந்த புகைப்படத்தில், நாடக கலைஞர்கள் சிலர் இந்து கடவுள்கள் வேடம் அணிந்து, புகைபிடித்துக்கொண்டு நடந்து செல்கின்றனர். அந்த புகைப்படத்தோடு, ‘  பாஜகவிடம் சம்பளம் வாங்கும் இணையத்தில் கலாய்க்கும் குழுவுக்கு நாட்டுப்புற நாடக கலைஞர்கள் தங்கள் நிகழ்ச்சிகளை எப்படிப் நடத்துகிறார்கள் என்பது பற்றிதெரியாது. இது என்னுடைய படம் அல்ல. இந்துத்துவா ஒருபோதும் இந்தியாவாகாது.’ என எழுதியுள்ளார்.

லீனா மணிமேகலை பதிவிட்ட புகைப்படமும், அவர் கருத்து பதிவிட்டதும் மீண்டும் இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்