டெல்லி:பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம்(CCEA) நாளை ஜனவரி 19 ஆம் தேதி நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜன.31-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இதற்கிடையில்,பிப்ரவரி 1 ஆம் தேதி நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்ஜெட் கூட்டத் தொடரானது இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரானது ஜனவரி 31 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 11ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட கூட்டத் தொடரானது மார்ச் 11-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் முன்னதாக மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் (CCEA) நாளை ஜனவரி 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…
ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது.…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…